இறைவா இறைவா என்றும் நிறைவா
ஏகனே நீ துணை வா
மாநிலம் புகழ்திடும் மாமறைக்கதிபதி
மாண்புடைமை இறைவா
மாண்புடைமை இறைவா
மலையகம் புகழ் ஜாமியுல் அஸ்ஹர்
கலைவிளை மாணவரெமக்கே
மாண்புறு கல்வி சீரிய வாழ்வு
நேர் வழி அருளவாயே
ஆசிரியர்தனை மதித்து
அன்புடனே கலை பயின்று
மாசறு குணமும், ஞானம் வளர்ந்திட
பாசமருள் இறைவா
இறைவா பாசமருள் இறைவா
|
ReplyForward
|






